மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் மறைவு மத்தியில் மட்டுமின்றி அனைவர் இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்புலமின்றி அரசியலில் வேர்விட்டு நிழல்கொடுத்த ஆலமரம் இன்று சரிந்துள்ளது. மத்திய அமைச்சர் பஸ்வானின் மறைவுக்கு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:- பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்புடையவர் பஸ்வான். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் […]