மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் உலக வணிக கண்காட்சியில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று நடனமாடிய நடிகர் ரன்வீர் சிங், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை நடனமாடும்படி அழைத்தார். உடனடியாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும், ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.சுமார் 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது.இந்த நிலையில்,தொழில் கண்காட்சியில் பங்கேற்க இன்று மாலை தனி விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் துபாய் செல்கிறார். பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு: அங்கு சென்று தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.மேலும், கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட […]