டெல்லி : டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பெரும் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இனிப்பு கடைக்கு அருகே ஒரு ஸ்கூட்டரில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், வெடிப்பு சத்தம் பெரியதாக […]
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் மிண்டானோ பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள பர்வாடா மண்டலில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் தெரிவிக்கையில் திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் பார்மா நகரில் உள்ள லாரஸ் நிறுவனத்தின் யூனிட்-3ல் வாயு கசிவு ஏற்பட்டது. சில தொழிலாளர்கள் எரிவாயு கசிவைத் தடுக்க முயன்றனர், ஆனால் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது, […]
கிழக்கு பாக்தாத்தின் குடியிருப்பு பகுதியில் கால்பந்து மைதானம் அருகே எரிவாயு டேங்கர் வெடித்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கால்பந்தாட்ட மைதானம் மற்றும் கஃபே ஆகியவற்றிற்கு அருகிலுள்ள கேரேஜ் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிப்பொருள் ஒன்று வெடித்ததன் காரணமாக அருகில் இருந்த எரிவாயு டேங்கர் ஒன்று வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பலியானவர்களில் பெரும்பாலானோர் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Also Read: Somalia […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு. உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு பொருட்கள் (எலக்ட்ரானிக்) உற்பத்தி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் படுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வெடி விபத்தை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் […]
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரு அறை தரைமட்டமானதில் சோலை விக்னேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும்,மறுபுறம் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளனர். இதனையடுத்து,பட்டாசுக்கு தேவையான மூலப் பொருட்களை கலவை […]
உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பிற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை பொடி போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கம் போல அனைவரும் பணிக்கு வந்து வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென நீதிமன்ற வளாகத்தினுள் மர்மப் பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அருகில் இருந்த சில பொருட்கள் மற்றும் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் […]
சியாரா லியோனில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்கா நாட்டின் சியாரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் டேங்கர் ஒன்று லாரி மீது மோதியதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால்,அரசு நடத்தும் சவக்கிடங்கில் 90 க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்துள்ளதாகவும், ஃப்ரீடவுனைச் சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சுமார் 100 பேர் சிகிச்சை […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கிழக்கு மாகாணமான கோஸ்டில் இருக்கும் மதப்பள்ளி ஒன்றில் கையெறி குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவீடன் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுவீடனின் தென்மேற்கு நகரமான கோதன்பெர்க்கில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 முதல் 25 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நகரத்தின் மையப்பகுதியில் இன்று காலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், இதனால் பல கட்டிடங்களில் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து 100 முதல் 200 […]
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சிலிண்டர் வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் நர்சபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் ஆறு வயது சிறுவனான ரோஹித் குமாரும் அவனது தந்தை பொம்மிடி நாகராஜும் (35) இருந்துள்ளனர். அதனால் சிலிண்டர் வெடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக அப்பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். மீட்கப்பட்ட […]
காபூல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியில் இருந்து அங்கிருந்து விலகி வருகிறது. இதனால், தற்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு […]
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் அருகில் குண்டு விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையம் அருகே இன்று மாலை வெடிகுண்டு விபத்து […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தால் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பகல்கர் மாவட்டத்தில் தஹனா என்ற பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளார். இதனை […]
பாக்கிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு கால்பந்து மைதானம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயமடைந்தனர். பஞ்ச்கூர் மாவட்டத்தில் இரண்டு அணிகளின் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு விளையாட்டுக்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று மாகாண செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். சக்திவாய்ந்த வெடிப்பில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ தாக்குதலைக் […]
பாகிஸ்தானின் காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே சந்தையில் ஏற்பட்ட கையெறி குண்டு தங்குதலில் 25 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 22 பேர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையெடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியைத் தொடங்கினர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்தவொரு […]
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து நாசமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே வள்ளி மில் எனும் பகுதியில் கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கடை கடந்த மூன்று மாதங்கள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உள்ளேயிருந்து பட்டாசுகள் வெடித்துள்ளது. சிறிது நேரத்தில் கடை […]
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் பத்து குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறையில், பாக்கு தோப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தனியார் இடத்தில் குடிசைகளை அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் மளமளவென பெருகிய தீ, அருகே இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. […]
டெல்லியில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர். மேற்கு டெல்லியின், மோதி நகரில் சீலிங் பேன் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு ஆலையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திடிரென வெடித்து சிதறின. இதனால், தொழிற்சாலையின் சில பகுதிகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி, 7 பேர் பலியாகினர். தீயனைப்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து பகுதிக்கு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 15 பேர் பத்திரமாக […]