மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இன்று 7ஆவது கட்டமாக 57 தொகுதிகளுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் […]
புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 இடங்களில் வெற்றிபெற்று, ரங்கசாமி ஆட்சியை பிடிப்பார் என்று ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள், வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 […]
தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 34-38 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.அதேபோல் அதிமுக-பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.