அனைத்து மதுக்கடைகளையும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த அனைத்து மாநிலங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,புதுச்சேரியில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்துவதற்காக சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் பொது முழு ஊரடங்கை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. […]