கொற்கையில் ஆழ்கடல் ஆய்வின் முதற்கட்ட ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்ச அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொல்லியல் துறை சார்ந்த முக்கிய தகவலை குறித்து பேசினார். அதாவது, முதல்வரின் உரையில், சங்க கால தமிழர்கள் நன்கு முதிர்ச்சியடைந்த நகர பண்பாடு பெற்றிருந்தது கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் […]
அகரம் அகழாய்வில் மூன்றாவது முறையாக 8 அடி கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அகரம், கீழடி, மணலூர், கொந்தகை உள்ளிட்ட சில இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுடுமண், காதணிகள், மண்பானைகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பதாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது 15 சுடுமண் உறைகளுடன் கூடிய உறைகிணறும், 8 அடி நீளமுள்ள ஒரு உறைகிணறும் […]
சிவகங்கை கீழடி அகழாய்வு தளத்தில் பழங்கால தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வு தளத்தில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கிருந்து பல்வேறு உறைகிணறுகள், பானைகள், செங்கல் கட்டுமானம், புகைப்பிடிக்கும் கருவி, பொம்மை ஆகிய பல பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணி வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் அப்பகுதியில் ஆராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது இந்த பகுதியிலிருந்து காதுகளில் அணியக்கூடிய […]
கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார்.
கீழடி அகழாய்வு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கூறியுள்ளார். கீழடி, கொந்தகை மணலூர் அகரம், ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வு பணிகளில் பல கட்டமாக கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அகழ்வுப் பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு பெற்று அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அகழாய்வு பணிகளில் பழங்காலத்தை சேர்ந்த பல பொருள்கள் […]
கீழடியில் ரூ.12.21 கோடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஐந்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் போது எலும்புக்கூடுகள், நாணயம் மணிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் பழந்தமிழரின் புகழை உலகறியச் செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி […]
கீழடி, கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. கொந்தகைகயில் நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 5 குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடுகள் கண்டு எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, முதுமக்கள் தாளிகளும் கண்டெடுக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து […]