மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பிஅய்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
மாண்டஸ் புயல் காரணமாக பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என அறிவிப்பு. தமிழகத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியால் பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா, சென்னை, அண்ணாமலை, திருவள்ளூர், எம்ஜிஆர், பாரதிதாசன், சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோன்று, பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதே கால அட்டவணைப்படி வரும் 16-ஆம் தேதி […]