சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் தமிழகம் நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், ஒரு சில இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் […]
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கனம ழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைகலக்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, கனமழை எதிரொலியாக, திருச்சி பாரதிதாசன் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை […]
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக […]
ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதை தொடர்ந்து […]