வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த […]
தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடைபெறும் என அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிச.22ம் தேதி வரையும், 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. .தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், TNPSC […]
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இம்முறை புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாள்கள் அமையவுள்ளன. இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாதிரி வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்கள் வழங்கப்படும் போன்ற விவரங்கள் உள்ளன. வினாத்தாள் வடிவமைப்பை www.dge.tn.gov.in என்ற […]
பிப்ரவரி 1-ம் தேதி 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர்கள் நியமனம், மாணவர்களின் விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வு துறை […]