மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது என சு.வெங்கடேசன் எம்.பி கருத்து. கோவை அனில்குமாருக்கு உத்தரகாண்ட் – கனாசரில் தேர்வு மையம் போடப்பட்டிருந்ததை மாற்றித்தர கோரிய கடிதத்திற்கு வந்துள்ள பதில் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘இயந்திரம் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். ஆகவேதான் மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைப்பு. நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 15/2022, நாள் 18.07.2022-60 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் […]