கொரோனா காரணமாக செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பல்கலைகழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் வரும் 19-ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பல்கலைகழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொரோனா காரணமாக […]
அரியர் மாணவர்கள் தேர்ச்சிவிவகாரத்தில் ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் கலை-அறிவியல், பொறியியல் படிப்புகளில் கடந்த காலங்களில் தோல்வியடைந்த மாணவர்கள், அத்தாள்களை கடந்த மே மாதம் நடைபெறவிருந்த பருவத்தேர்வுகளில் எழுத விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது தவறானது என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ) கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களிடையே பெரும் குழப்பம் […]
இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் , விரைவில் தேர்வு அட்டவணை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனிடையே கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு […]