புதுச்சேரி:கொரோனா பரவல் எதிரொலியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த நிலையில்,அவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க […]
ஆந்திர மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்த வருடம் கல்வியை ஆன்லைன் வழியாக நடத்தினர். தமிழகம் மற்றும் பல இடங்களில் 12 ஆம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து கலந்தாலோசித்து வருகின்றனர். இருந்தபோதிலும் ஆந்திர பிரதேசம் பத்தாம் வகுப்பு மாணவர்களின் […]
டெல்லி பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு, செமஸ்டர் தேர்வுகளை ஜூன் 7 க்கு ஒத்திவைப்பு. டெல்லியில் கொரோனா தொற்று கோரத்தாண்டம் ஆடிய நிலையில், மிகுந்த பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அனைத்து விதமான கல்வி சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து நடைபெற டெல்லி அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசு தேர்வெழுதும் மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் உள்ளனர். இதனையடுத்து, நேற்று டில்லி பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் / […]
வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக மே 31 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்களும் மூடப்பட்டு, நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், சிபிஎஸ்இ மற்றும் நீட் போன்ற […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முவதும் உள்ள கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தம் பணிகளையும் நிறுத்திவைக்க அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு எடுத்து […]