இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் அறிவிப்பு வெளியாகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வருகின்ற ஜூலை 5-ம் தேதியன்று நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் ரத்து எனவும், இறுதியாண்டு மாணவர்களுக்கு இதற்க்கு முன் நடந்த பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், 10-ம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. எற்கனேவே தேர்வு குறித்த தேதிகள் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் […]
புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்தது. மேலும் அனைத்து அரசு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. பின் குஜராத்தில் 10 மற்றும் […]
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா செஷன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் MBBS , பல் மருத்துவம் மற்றும் B.pharm ஆகிய துறைகளுக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய தினம் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெற […]
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த M.Phil (ஆய்வியல் நிறைஞர்)மற்றும் தனித் தேர்வு (Private Exam) ஒத்திவைக்கப்பட்டுள்ளது . தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேர்வுகளை ஓத்தி வைப்பதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .. source: dinasuvadu.com