அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது. இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக […]