திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் சுமார் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள் சட்டத்துக்கு முரணான வகையில் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த […]
தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்: தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். […]
திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ளது. திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று மாலை 5 மணியுடன் நிறைபெற்றது. இந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வருமானவரி தரப்பில் […]
தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐ.டி.ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய எ.வ.வேலு தனது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக தகவல் கூறப்பட்டது. இதில் குறிப்பாக திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ. […]
தமிழக சட்டப்பேரவை இன்று நடைபெற்றது.இதில் ஒரே நாடு ஒரே அட்டை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு . அதன் பின்னர் அவர் பேசுகையில்,ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உள்ளது. ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு பண சுமை ஏற்படும். பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு பேசினார்.