Congress : தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஒப்புகை சீட்டு 100 சதவீத சரிபார்ப்பு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மீண்டும் வாக்குசீட்டு முறைப்படி தேர்தலை நடத்த முடியாது என்றும் , வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க முடியாது என்றும் கூறி இதற்கான பொதுநல வழக்குகள் அனைத்தும் […]
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் போது, VVPAT எனப்படும் தேர்தல் ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் என்ன வேண்டும் என்றும், EVM மிஷினில் உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் தொடர்பாகவும், பழைய வாக்குசீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் […]
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு செல்ல வேண்டாம். தற்போது தேர்தல் […]
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுகையில், VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதிக்கட்ட விசாரணை […]
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள் மூலம் இயந்திரமயமானது முதலே அதில் பதிவாகும் வாக்குக்களின் உண்மைத்தன்மை குறித்த பல்வேறு சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை ஹேக் செய்து ஒரு சின்னத்திற்கு அதிக வாக்குகள் பதிய வைக்கிறார்கள், கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்த சந்தேகங்கள் தற்போது […]
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் இயந்திரங்களின் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறலாம் என […]