நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். மேலும் வடிவேலு பொதுவாக எந்த விழாவிற்கு சென்றாலும் கண்டிப்பாக அந்த விழா கலகலப்பாக இருக்கும், பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு ஜாலியாக இருப்பார். […]