எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் உத்தரவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் […]
2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் அதிகாரி எஸ்.எஸ்.வி.ராமகுமார் தகவல். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் வரும் 2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தை விலையை பொறுத்தே எரிவாயு சிலிண்டர் விலை விற்பனையாவதால், விலை மாறுதல் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) […]
பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகத்தால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுசூழலை பாதுக்காக்கும் வகையில் மத்திய அரசின் உத்தரவின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில் கசிந்துவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், […]