ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியுமில்லை, யாருக்கும் ஆதரவுமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தவெகவின் இலக்கு என்று கூறிய அவர், இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவைத் தொடர்ந்து விஜய்யின் தவெகவும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை களத்தில் […]