2023-24 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தி ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO நிர்ணயித்துள்ளது. மாதம் சம்பளம் பெறுவோரின் வருங்கால செலவிடுகளுக்காக EPFO கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15% வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக மத்திய அரசு […]
பிறப்பு சான்றாக (DoB) ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, அனைத்து சேவைகளுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பணியில் சேர்வதில் தொடங்கி வங்கிகளில் கணக்கு தொடங்குவது, பிஎப், இபிஎப்ஓ கணக்குகள் என அனைத்திலும் ஆதார் தவிர்க்கமுடியாத ஆவணமாக உள்ளது. இதுபோன்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார், பிறப்புச் சான்று […]
நடப்பு நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50% லிருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய,மாநில அரசுகளை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ஆரிக்கையில் அவர் கூறியதாவது: பேரறிஞர் அண்ணா கூறியது: ‘தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில் வளம் பெருகும் என்பதால்தான், ‘தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு […]
2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக பி.எஃப் மீதான வட்டி இரண்டு ஆண்டுகளாக 8.50% ஆக இருந்த நிலையில்,தற்போது 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக,2018-19 ஆம் ஆண்டு 8.65% ஆக இருந்த வட்டி அதன்பின்னர்,8.50 ஆக குறைக்கப்பட்டது.எனவே,தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படக் கூடாது […]
மத்திய அரசு இந்த நிதியாண்டு முதல் பிஎஃப் கணக்குகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த நிதியாண்டு முதல் இரண்டு பிஎஃப் கணக்குகளை திறந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டரை லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள பிஎஃப் பங்களிப்புக்கு கிடைக்கக்கூடிய வட்டிக்கு வரி விதிக்கப்படுவதாக 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2.5 லட்சத்துக்கு அதிகமாக பிஎஃப் செலுத்துவோர் வரிக்குட்பட்ட பங்களிப்பு, வரிக்குட்படாத […]
எந்த ஆவணமும் இல்லாமல் PF சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். EPFO இன் சமீபத்திய அறிவிப்பின்படி, ஊழியர்கள் எந்த ஆவணமும் இல்லாமல் PF சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. EPFO வின் அறிவிப்பின் படி, முறைப்படி அல்லது தேவையான ஆவணங்களில் தளர்வு அளிப்பதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக பணம் பெற முடியும். மேலும், ஊழியர் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த […]
செப்டம்பர் 1-ம் தேதிக்குள் EPFO-வுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். EPFO (Employees’ Provident Funds Ordinance) சந்தாதாரர்கள், தங்கள் ஆதார் அட்டையை EPFO-வுடன் 2021 செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால், வரும் நாட்களில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக EPFO வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 1-ம் தேதி 2021-க்குள் முதலாளிகள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்) உடன் ஆதார் எண்கள் இணைக்க வேண்டும். […]
தனியார் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு பணிபுரிபவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால்,இறந்தவரின் குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் தருகிறது. PF கணக்கு : இந்த நிவாரணத்தை பெற […]
EPFO 8.50 சதவீத வட்டி விகிதத்தை மொத்தமாக சுமார் 19 கோடி பிஎஃப் பயனாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அண்மையில் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதத்திலிருந்து, 8.50 சதவீதமாக குறைத்தது. மேலும், 8.50% வட்டி விகிதத்தையும், 8.15 சதவீதம் மற்றும் 0.35 சதவீதம் என இரண்டு தவணைகளாக […]
பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தாதாரர்களின் புகார்களை விரைவாக தீர்க்கும் நோக்கத்துடன் இந்த சேவை கொண்டு வரப்பட்டதாக தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. EPFO ஏற்கனவே EPF IGMS போர்ட்டல், CPGRAMS, சமூக ஊடக தளங்களான (பேஸ்புக் மற்றும் ட்விட்டர்) மற்றும் 24 மணி நேர கால் சென்டர் ஆகியவை மூலம் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. EPFO இன் 138 பிராந்திய அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவைகள் […]