சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடக்கும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் சுற்றுசூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல் உலக நாடுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் குறித்தும் […]