அகரம் அகழாய்வில் மூன்றாவது முறையாக 8 அடி கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அகரம், கீழடி, மணலூர், கொந்தகை உள்ளிட்ட சில இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுடுமண், காதணிகள், மண்பானைகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பதாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது 15 சுடுமண் உறைகளுடன் கூடிய உறைகிணறும், 8 அடி நீளமுள்ள ஒரு உறைகிணறும் […]