பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்களின் ஆர்வம் அதிகாரிப்பு..!
பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் […]