இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையே ஒரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 428 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப் சதீஷ் 69, ரோட்ரிக்ஸ் 68, ஹர்மன்பிரீத் கவுர் 49, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி ஷர்மா 67 ரன்கள் எடுத்தனர். […]