கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு. 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு, அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், பொறியியல் முதலாமாண்டு சேர்க்கை நவம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். […]
பொறியியல் படிப்புக்கான 3வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும் […]
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு செய்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு. பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து, 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளையுடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் […]
பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை என அமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது, கேள்வி – பதில் நேரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருவதாக தெரிவித்தார். ஆன்லைன் கலந்தாய்வில் […]