மலையாள சினிமாவின் பிரபலமான நடிகை உர்மிளா உன்னி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது, சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது மகளான உத்தரா உன்னி-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர் பிரபலமான நடிகையும், பாரத நாட்டிய கலைஞரும் ஆவார். இவர் தனது நிச்சயதார்த்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]