இங்கிலாந்து அணி முதல்நாள் முடிவில் 500 ரன்களுக்கு மேல் அடித்து மேலும் ஒரு உலகசாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 506/4 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 494/6 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இங்கிலாந்து அணியில் ஒரேநாளில் 4 பேர் சதமடித்துள்ளனர். சாக் கிராலி 122, பென் டக்கெட் 107, […]