காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங்கிடம் 5 மணி நேரம் அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங் உறவினர் புபிந்தர் சிங் ஹனியை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.