பல்வேறு நபர்கள் பல்-லில்ஏற்படும் பிரச்சனை அதிகமாக உள்ளது.அதனை சரியான முறையில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேவையில்லாத செயல்களை செய்வதினால் பல் வலி தான் அதிகமாகும். பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது. உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். […]