இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டம். கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப வேலையில் உள்ள சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது. அதுவும், இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது என இந்த விஷயத்தை அறிந்தவர்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமேசானின் சாதன அமைப்பு, மனிதவள பிரிவு, சில்லறை விற்பனை பிரிவுகளில் ஊழியர்களை நீக்க அமேசான் முடிவு செய்துள்ளது. மூலதன மதிப்பு […]
தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் […]
ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பால் இந்நிறுவனத்தின் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர் என கமல் அறிக்கை. கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கானோர் வேலையிழந்திருக்கும் நிலையில், ஃபோர்டு நிறுவனம் தனது இந்தியத் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்திய தொழ்ற்சாலைகளில் தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதன் பல்லாயிரம் கணக்கான ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப் போதுமான கட்டமைப்பும், திட்டமும் இல்லாதது […]
செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை ஹெச்.ஆர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்,தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். எனினும்,தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,குறைந்த பட்ச ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில்,செப்டம்பர் முதல் ஊழியர்களை படிப்படியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் […]
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையின் ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால்,இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதனால்,காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும்,சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஹுண்டாய் தொழிற்சாலை இந்த ஊரடங்கு காலத்திலும் இயங்கி […]
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் இருந்தே முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் அமெரிக்காவில் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் நடந்து […]
டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69-ஏ இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதுகுறித்து, இந்திய அரசு கூறுகையில், மக்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது நிலையில், […]
coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர். பிரபல குளிர்பான நிறுவனமான coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர். கொரோனா தொற்று, காரணமாக குறைவான மக்களே தியேட்டர்கள், பார்கள் மற்றும் மரங்கள் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். இதனால் coca-cola விற்பனை மிகவும் […]
சென்னை தியாகராயநகர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் காயம்! சென்னை தியாகராயநகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பெட்ரோல் சேமிப்பு கலனை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வேலூரில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து டேங்கில் நிரம்பும் போது திடீரென தீ எரித்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 3 ஊழியர்களும் மருத்துவமனையில் […]
தமிழகம் முழுவதும் நேற்று 2 மணிநேரம் மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம். தமிழகம் முழுவதும் நேற்று 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட 450 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 450 பேர் குடோன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலை நேரம் குறைப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நேற்று 2 மணிநேரம் டாஸ்மாக் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது என்பது […]
சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹேக்கர்கள் ஹேக் செய்வது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்த ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 கணக்குகளில் 45 கணக்குகள் எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் […]
எமிரேட்ஸ் குழுமத்தின் 30 விழுக்காட்டு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் விமான மற்றும் பேருந்துப்போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டன. இதனால், 70 சதவீதம் உலகின் விமானப் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில், பயணிகள் மூலம் கிடைக்கும் 314 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்க நேரிடும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து , எமிரேட்ஸ் விமான […]
போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ_ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: இன்று (ஜனவரி 22-ஆம் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் கைது 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. […]
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக, மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நேற்று, நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில், ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. […]
C மற்றும் D பிரிவு பணியாளர்களாக வேலைபார்க்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது . இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , முறையான காலமுறை சம்பளம் பெறும் C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்_சாக 3000 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது.இது உள்ளாட்சிமன்ற பணியாளர்கள் அரசின் மானியம் பெறும் கல்லூரி பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். A , B பிரிவு உயர் அதிகாரிகளாக கருதப்படும் குரூப் 1 , குரூப் 2 மற்றும் IAS அலுவலர்களுக்கு […]
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து , பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்ற 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இன்றும் நாளையும், மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்ட்டத்தால் மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய முழுவதும் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் […]
அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மசோதா குறித்து ஆலோசிக்க கூடிய செனட் சபையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் 9 அரசுத் துறைகள் முடங்கியுள்ளன. பிரமாண்ட எல்லை சுவருக்கு செனட் சபையில் எதிர்ப்பு தொடர்வதால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னரும் […]