BERAKING:சென்னையில் அவசர பணிக்காக 200 பேருந்துகள் இயங்கம்.!
இன்று முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்ப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான , பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள் , சுகாதாரப் பணியாளர்களுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.