நீலகிரி: தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் மழையில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, மரம் சரிந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மழைநீர் ஊருக்குள் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் பல்வேறு பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டது. நேற்று வரை கொட்டித்திருத்த […]
தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மிக கனமழையால், பல்வேறு இடங்கல் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. பெரிதும் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை […]
ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளான 100,112க்கு பதிலாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பில் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாம், அதனால், ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளை மேற்கொள்வதில் தற்போது சிறு சிக்கல் உருவாகி உள்ளது. காவல்துறை அவசர அழைப்பு எண்களான 100, 112 ஆகியவற்றை ஏர்டெல், வோடஃபோன், ஜியோ மூலமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக தொடர்புகொள்ள […]