பெங்களூருவில் செயல்பட்டு முக்கிய சுமார் 15 பள்ளிகளில் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டலானது கிடைக்கப்பெற்றது. இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக அனைத்து பள்ளி மாணவர்களையும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, தற்போது குறிப்பிட்ட பள்ளிகளில் வெடிகுண்டு சோதனையாளார்கள் பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் […]
பிறப்பு, இறப்பு, ஜாதி மற்றும் பிற சான்றிதழ்கள் பெற வரிசையில் நிற்கும் காலம் போய்விட்டது. இனி இந்த ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறலாம். பஞ்சாப் அரசு 283 குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “விண்ணப்பதாரர்கள் இப்போது இந்த சான்றிதழ்களை கையொப்பத்துடன் நேரடியாக வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெற முடியும்” என்று நிர்வாக சீர்திருத்த அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறினார். இந்தச் சேவைகள் சாதி, […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தவறான தகவல் பரவி வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் […]
மத்திய அரசின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா,பிக் பாஸ்கெட்,டொமினோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தளங்களிலிருந்து,பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில்,மத்திய அரசின் பாதுகாப்பு துறை […]
சென்னை மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கி,காவலன் என்ற செயலியையும் வெளியிட்டது. தற்போது சென்னையில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு வசதியாக வாட்ஸ் அப் எண் மற்றும் முகநூல், மின்னஞ்சல் முகவரிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக பாலியல் தொல்லை, வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை போன்றவைகள் நடந்து வருவதால், அதுபோன்று சம்பவங்கள் குறைக்கும் அளவுக்கும், மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் […]