சென்னை: சென்னையில் நேற்று நடந்த அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில், தவெக தலைவர் விஜய், விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசியது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், திமுக கூட்டணி கட்சியாக இருக்கும் விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேற்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சொல்லியிருக்கிற கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு, கட்சி பொறுப்பல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச சுதந்திரம் உண்டு. […]