48 நாட்கள் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான இந்த முகாம் துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி என்னுமிடத்தில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடத்த வேண்டும் என தமிழக அரசால் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான அரசாணையும் அன்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு நடைபெறக்கூடிய இந்த சிறப்பு முகாமில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட […]