சென்னை : மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நா மின்சார வாரியத்தை, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என இரண்டாக பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும், மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுமறுப்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக ஒரு பொய்யான தகவல் கடந்த சில நாட்களாக […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடவிய விடிய வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை ஒரு தீவு திடலாக காட்சியளிக்கிறது, பார்க்கும் இடம்மெல்லாம் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக உள்ளது. இந்த சூழலில் சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து, மழை நின்றுள்ளது. மிக்ஜாம் புயலானது […]
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “மின் கட்டண உயர்வால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்திருக்கும் நூல் உற்பத்தி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.” […]
நூல் விலை ஏற்றம், மின் கட்ட டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் வர்த்தகமும், வெளிநாடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கட்டண உயர்வால் கொங்கு மண்டல பகுதியிலுள்ள சிறு, குறு, நடுத்தர […]
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்றும் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி, அதில் லிங்கை க்ளிக் செய்ய வைத்து மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது என தமிழக மின்சார வாரியம் […]
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 2 ஆயிரதிற்க்கும் மேற்பட்டோர் கூறப்படுகிறது. தற்போது, காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா நகரில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க update செய்யப்பட்ட புதிய Link வெளியீடு. தமிழ்நாட்டில மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மின் கட்டணம் செல்லும் அலுவலகங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதி வரை ஆதார் எண்ணை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மின் இணைப்புகள் ஆதார் என்னுடன் இணைக்கும் பணிகள் […]
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,நேற்று நள்ளிரவு நடைபெற்ற களிமேடு தேர் திருவிழாவில் தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால் மின்சாரம் […]
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில், அதில் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதையும் தற்பொழுது நிறைவேற்றவுள்ளது. அதன்படி பஞ்சாப்பில் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ரூ.5157 கோடி வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு. அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு […]
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றபோது ஏழுமலை என்பவரும்,சரண்ராஜைக் காப்பாற்ற வந்த ரேணுகோபால் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சரண்ராஜ் மீதான நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொலை செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறபபடுகிறது. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]
தமிழ்நாடு மின் வாரியம் , பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல்படுகிறது. முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல் படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின் வாரியத்தின் பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து […]
தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. டெல்லியில் மட்டுமல்லாமல் மேலும் ஒரு மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் தான் மைக்கேல் ஃபாரடே. இவர் காந்தவியல் மற்றும் மின்சாரவியல் இடையே உள்ள தொடர்புகளை ஆய்வுகளின் மூலம் நிரூபித்தவர். மேலும் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தவரும் இவர் தான். கம்பிச் சுருள் காந்தத்தை நடத்துவதன் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் கண்டறிந்தார். இவர் மின்சாரத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் அதிக […]
மின்சாரத்துறைக்கு ரூ.19872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது என்பது உண்மைக்கு மாறானது. 2500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையில் இருந்து வாங்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17 ஆயிரத்து 970 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும் . மின்சாரத்துறைக்கு ரூ.19872 கோடி […]
மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி சென்னையில் பெண் உயிரிழந்துள்ளார். தற்போது சென்னையை சுற்றி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பெரியார் நகரில் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி அலிமா எனும் பெண் உயிரிழந்துள்ளார். மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் ஒரமாக செல்ல முயன்றபோது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்சார உச்சவரம்பு 150 கிலோ வாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்சார உச்சவரம்பு 112 கிலோவாட்டில் இருந்து 150 கிலோவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் துயர் துடைக்கும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்களின் தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோ வாட் வரை பெற்றுக்கொள்ளலாம் என மின்சார ஒழுங்குமுறை […]
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம். தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களை தற்பொழுது எளிமையாக்கி தாமதமின்றி விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் கிணறு மற்றும் நிலத்தின் உரிமத்தை கிராம அலுவலரிடம் பெற்று இணைத்தால் அதுவே போதுமானது. விவசாய மின் இணைப்பினை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம், […]
தெலுங்கானாவில் மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின்சாரத் துறை அதிகாரிகளை கட்டி வைத்த மக்கள். தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்சார கட்டணங்களை வசூலிக்க அந்த பகுதிக்கு மின்சாரத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது,கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களிடம் எப்படி மின்சார கட்டணம் வசூலிக்கலாம் என அதிகாரிகளிடம் அந்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ஒரு கட்டத்தில் அந்த கிராம மக்களுக்கும் , மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும் இடையே […]