நீலகிரி :பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 43). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், இன்று காலை 6 மணி அளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பேருந்து கோத்தகிரியை நெருங்கும்போது, சாலை ஓரம் மின் கம்பி ஒன்று அறுந்து […]