இந்தியாவில் சொந்த விற்பனை நிலையங்கள்…டெஸ்லாவின் அதிரடி முடிவு…!

இந்தியாவில் முழுமையாக சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக பல சாலைத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும்,அதன் வாகனங்களை விற்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் … Read more

“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” – எலான் மஸ்க்

“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டியுள்ளது, மேலும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கி வருகிறது. இதனால் பலரது வாகனங்களை வெளியில் எடுத்து செல்லமுடியாமல் வீட்டிலேயே வாகனங்களை முடக்கி வைக்கும் நிலை வந்துள்ளது. இதனால் பலரும் சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். மேலும், … Read more

குஜராத் அரசு அறிவிப்பு: மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை..!

மின்சார வாகனங்கள் வாங்குபருக்கு குஜராத் அரசு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. குஜராத்தில் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஆகிய வாகனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 1.50 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளது. குஜராத் அரசு 870 கோடி ரூபாயை வரும் 4 ஆண்டுகளில் 2 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கியுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரையும், கார் போன்ற வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையும் … Read more

மின்சார கார் உற்பத்தி மூலம் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் உச்சத்தை எட்டியுள்ளது…!

டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை விற்பனை செய்ததாகவும்,இதனால்,10.3 பில்லியன் டாலர் சம்பாதித்து வருவாயை உயர்த்தியதாக தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைந்த நிலையில்,பல நிறுவனங்கள் தங்கள் வருவாயை கணக்கிட்டு வருகின்றன.அதன் வரிசையில்,அமெரிக்க மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது வருவாயை கணக்கிட்டு கூறியுள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை 10.3 பில்லியன் … Read more

ரஷ்யாவில் தயாராகவும் புதிய மின்சார கார் இந்த ஆண்டு உற்பத்தி தொடக்கம்-வர்த்தக அமைச்சர்

ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் கார் தயாரிப்பாளரான ஜெட்டா எலக்ட்ரிக் காரை வடிவமைத்து வருவதாகவும், இந்த ஆண்டு உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மந்துரோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;அவை இந்த ஆண்டின் இறுதிக்குள் (உற்பத்தி) தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆனால் அது வளர்ச்சி பணிகள் எவ்வாறு நிறைவடைகிறது என்பதைப் பொறுத்தது” என்று மானுரோவ் கூறினார். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியாளரான ரஷ்யாவில் வாகனத் தொழில் தற்போது … Read more

இந்தியாவில் கால்பதிக்கும் டெஸ்லா…அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு முதல் பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கால்பதிக்க உள்ளதாக அதன் சிஇஓ எலோன் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான தகவல்:- டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் கால்பதிக்காது எனினும் அடுத்த ஆண்டில் உறுதியாக இந்தியாவில் கால்பதிக்கும் என்று ட்விட்டரில் 2019 மார்ச்சில் எலோன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் கொரோனாத் தொற்றால் உலகமே முடக்கிய நிலையில் எப்போது இந்தியாவுக்கு வரத் திட்டம் என்று ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு … Read more

ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!

களத்தில் குதித்தது  டாடா மோட்டார்ஸ், மின்சார கார் தயாரிப்பில் ஆர்வம். ஆரம்ப விலை 15 இலட்சம் என நிர்ணயம். தற்போது இந்திய சந்தையில் அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும்  மின்சார  வாகன தயாரிப்பில் இறங்கி அதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், டாடா நிறுவனம்  அதன் முதல் மின்சார  எஸ்யுவியை அறிமுகம் செய்ய தற்போது தயாராகிவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய  நெக்ஸான் இவி என்ற  தனது முதல் மின்சார  எஸ்யுவியை அடுத்த வாரம் … Read more

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்  ,31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மின்சார வாகனங்களின்  விலை  கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

சோதனை ஓட்டத்தின் பொது சிக்கிய மஹேந்திரா E KUV100!!

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார், மஹேந்திரா E KUV100. முற்றிலும் பேட்டரியால் ஓடும் இந்த காரின் சோதனை ஓட்டம் நடந்தது. அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியானது. இந்த கார், 40 கிலோவாட் மற்றும் 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதில் 16kWh பேட்டரி பேக் வழங்ப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ வரை செல்லும். வாகனத்தின் எடையை ஈடுசெய்ய சஸ்பென்ஷனில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், காரின் கேபின் ஸ்பேஸ் … Read more

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் திடீரென வெடித்து சிதறியது! தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை!

தற்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகரித்தாலும் உலகம் முழுவதும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருவதாலும்  முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை கனடா நாட்டின் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச்  … Read more