Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் […]