டெல்லி: ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 5,39,189 தபால் வாக்குகள் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியது. இந்த பதிவான தபால் வாக்குகளில், படிவம் 13ஏ-வில், கையெழுத்திடும் அதிகாரி, அவர் கையொப்பம் மட்டுமல்லாது, பதவி மற்றும் முத்திரை இருக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறையை தளர்த்தி ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு […]
மேற்கு வங்கம்: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. நாளை (ஜூன் 4) மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெற்று வந்தது. இருந்தும் சில இடங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சியினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மேற்கொள்ளும் […]
மக்களவை தேர்தல்: உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையயில், இன்று இறுதி கட்ட தேர்தல் வாக்குபதிவில் மீதம் உள்ள 13 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் வகுப்பதிவில் தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோஷி மக்களவை தொகுதி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தற்போது வாக்குப்பதிவு குறித்து குற்றசாட்டை முன்வைத்துள்ளர். கோஷி […]
மேற்கு வங்கம்: இன்று மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குப்பதிவு இடங்கள் அதிகம் இருப்பதால், அங்குள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இறுதியாக 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு 24 பர்கானாஸிஸ் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தெற்கு 24 […]
மேற்கு வங்கம்: வாக்கு இயந்திரத்தில் பாஜக பெயர் பதித்த குறிப்புத்தாள் கட்டப்பட்டு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்தனர். அதற்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது . நாடாளுமன்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஓர் பரபரப்பு […]
டெல்லி: தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரங்களை 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற வழக்கு இன்று கோடைகால சிறப்பு அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மக்களவை தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவுடையும் போதும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதம் பற்றி உச்சநீதிமன்றத்தில் ஓர் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் போதும், நிறைவடைந்து 48 […]
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு செல்ல வேண்டாம். தற்போது தேர்தல் […]
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள் மூலம் இயந்திரமயமானது முதலே அதில் பதிவாகும் வாக்குக்களின் உண்மைத்தன்மை குறித்த பல்வேறு சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை ஹேக் செய்து ஒரு சின்னத்திற்கு அதிக வாக்குகள் பதிய வைக்கிறார்கள், கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்த சந்தேகங்கள் தற்போது […]
Election2024 : தேர்தல் அலுவலர்கள் சிலர் சரியாக வாக்குப்பதிவு விவரங்களை தெரிவிக்காத காரணத்தாலே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வெளியான வாக்குப்பதிவு சதவீத குளறுபடி தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு […]
Election2024 : தமிழகத்தில் 69.46%வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படியான சமயத்தில் […]
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் மட்டும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக நேற்று நடைபெற்று முடிந்தது. தமிழகம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவுகள் , அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் என சேர்த்து 21 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், அந்தமான் நிகோபார் தீவுகளில் […]
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிவரை என்று அறிவித்து இருந்தாலும், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பல்வேறு இடங்களில் 6 மணிக்குள் வாக்கு சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள், தபால் வாக்குகள் […]
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில் 102 தொகுதியில் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை ஒரு சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, கடும் […]
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். இப்படியான சூழலில், தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவங்களிலும் வாக்காளர்கள் […]
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இன்று […]