டெல்லி : மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தற்போது இன்று அறிவிப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் , ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை மட்டும் அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் : […]
சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் துவங்கியது. ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானது. இதற்கிடையில் மட்டுமல்லாது, தேர்தல் தேதி அறிவித்தது முதல் இன்று வரை தேர்தல் விதிகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது. இந்த தேர்தல் விதிகள் எப்போது நிறைவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், இதுகுறித்து நேற்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு நேற்று அளித்த பேட்டியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது உட்பட பல்வேறு புகார்கள் அரசியல் கட்சிகளிடம் […]
மக்களவை தேர்தல் : 543 லோக்சபா இடங்களுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதில், பாஜக 240 இடங்களையும், காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனிடையே, மும்பை வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளர் ரவீந்திர வைகருக்கு 4,52,644 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணி வேட்பாளர் அமோல் கஜனன் கிர்திகாருக்கு 4,52,596 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், வைகர் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். […]
சென்னை : மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், புதிய ஆட்சி அமைக்க இன்னும் 38 இடங்களே தேவைப்படுகிறது. அதற்கான ஆதரவை திரட்டவும் இக்கூட்டத்தில் வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த […]
பாஜக: மக்களவை தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் பாஜக கடந்த முறை வென்ற இடங்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதத்தை விட குறைவான எண்ணிக்கையையே பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று, 36.56% வாக்குகளை பெற்றுள்ளது. இது 2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில், அப்போது, பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று 37.7% […]
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், தேர்தல் ஆணையம், நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகளில் நாட்டின் ஜனநாயகாத்தை நிலைநிறுத்த வேண்டும். தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அதனை தீர்க்கும்படி தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்த பலமுறை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட […]
டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அதில், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராகவும் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளம் வாயிலாக விமர்சனம் […]
டெல்லி: மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் (ஜூன் 1) நிறைவுற்றதை அடுத்து, நாளை (ஜூன் 4) ஒரே நாளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் நாளை வரையில் தேர்தல் விதிமுறைகள் இந்தியா முழுக்க அமலில் உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. மற்ற பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு மது […]
டெல்லி: நாடாளுமன்ற 7 கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவடைந்து நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அது போல இந்தியா முழுக்க அந்தந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தற்போது […]
டெல்லி: தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரங்களை 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற வழக்கு இன்று கோடைகால சிறப்பு அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மக்களவை தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவுடையும் போதும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதம் பற்றி உச்சநீதிமன்றத்தில் ஓர் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் போதும், நிறைவடைந்து 48 […]
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் போது, VVPAT எனப்படும் தேர்தல் ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் என்ன வேண்டும் என்றும், EVM மிஷினில் உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் தொடர்பாகவும், பழைய வாக்குசீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் […]
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு செல்ல வேண்டாம். தற்போது தேர்தல் […]
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம். கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இருந்தார். இவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை […]
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுகையில், VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதிக்கட்ட விசாரணை […]
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள் மூலம் இயந்திரமயமானது முதலே அதில் பதிவாகும் வாக்குக்களின் உண்மைத்தன்மை குறித்த பல்வேறு சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை ஹேக் செய்து ஒரு சின்னத்திற்கு அதிக வாக்குகள் பதிய வைக்கிறார்கள், கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்த சந்தேகங்கள் தற்போது […]
Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26இல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள […]
PM Modi : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் , புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19இல் ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, வரும் […]
Election2024 : தமிழகத்தில் 69.46%வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படியான சமயத்தில் […]
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தமாக 102 தொகுதிகளில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து […]
Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் […]