டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் […]
Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகளை பெற்றது என்பது தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் […]
மகாராஷ்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் தொடங்கும்’ என்றார். “வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை அங்கீகரித்தல் மற்றும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்ததை […]
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு, 10 காவல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்.6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு, 10 காவல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்துள்ளது. தேர்தலையொட்டி, 3 ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள், அவர்கள் மீதான புகார்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை கண்காணித்து, பணியிடமாற்றம் செய்ய […]
மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை தேர்தல் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே பதிவியேற்று, வரும் 28ம் தேதி உடன் 6 மாதம் காலம் நிறைவடைய உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் முதல்வர் பதிவியை இழக்க இருந்த நிலையில், மே 27 ஆம் தேதிக்கு முன்னர் […]
மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த ஆணையம் ஒப்புதல் அளித்ததால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வர் பதவி கேட்டதால் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, […]
17 வயது பூர்த்தியாகியவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தை, பள்ளி அளவில் செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டைக்கு 18 வயது நிறைவடைந்தவர்கள், படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயற்குழுக்களில் விவாதங்கள் நடந்தன அதன் அடிப்படையில், புதிய திட்டங்களை செயல்படுத்த ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்படி, 17 வயது பூர்த்தியாகி 18 […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், மற்றும் முகவரி மாற்றம் செய்ய மாவட்டவாரியாக விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 89 […]
வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட உள்ளனர். 1 கோடி 64 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுமக்கள் அவர்களுடைய விவரங்களை சரி பார்த்து கொள்ள வேண்டும்..சரிசெய்யப்பட்ட பின் புதிய வாக்களர் அடையாள […]
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு ஜூலை 1-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். ஜூலை 8-ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. […]
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற […]
மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதில், நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்று மாநில தலைமை செயலாளர்,டிஜிபி-க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.நாளை வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை, மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.வாக்கு என்னும் நாளும் நெருங்கி வருகிறது.கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மீது ஒரு சர்ச்சை ஓன்று எழுந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் தகவல் ஒன்றை பெற்றுள்ளார்.அதில்,இந்திய தேர்தல் ஆணையம் வாங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) 20 லட்சம் இயந்திரங்கள் காணாமல் போன அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.இதனால் மனோரஞ்சன் […]
தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பான ஒன்றுதான் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதினார்.அதில்,பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்தார். இது தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகளிடையே பிளவு ஏற்பட்டது போல […]
4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பொது விடுமுறை […]
தமிழகத்தில் இன்று ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.அதேபோல் பரப்புரையும் முடிவு பெற்றது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 19 […]
வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பினை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நாளை தமிழகத்தில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது.சமீபத்தில் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் வேலூர் […]
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான […]
இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.2426.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது தமிழகத்தை பொருத்தவரை ஏப்ரல் […]