அடுத்தாண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்அந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மக்களவை தேர்தலை தொடர்ந்து சென்னையில் நாளை காலை 09:30 மணிக்கு தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா ஆகிய மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். சத்யபிரத சாஹு உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். மக்களவை தேர்த்தலுக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்ட உள்ளது. மேலும் அந்தமான், புதுச்சேரி […]