சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..! இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி […]