மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு அம்மாநிலத்தில் மராத்தா மக்கள் நீண்ட வருடமாக போராடி வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 16 சதவீத இடஒதுக்கீடு மராத்தா மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், இந்த 16 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் பிறகு அந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. இது மராத்தா சமூக மக்களிடையே அதிருப்தியை […]
மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு இரட்டை வாள் மற்றும் கேடயம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட இரண்டாக பிறந்த சிவசேனா கட்சியின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் சிவசேனா கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டனர். இதனை தொடர்ந்து கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை முடக்கியது. […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார்.மேலும்,பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இந்த சூழலில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் முன்னதாக போர்க்கொடி தூக்கினர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து,ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]