காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழப்பு.!
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா நெருக்கடிக்கு மகாராஷ்டிரா தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். ஏக்நாத் கெய்க்வாட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவரது மகள் வர்ஷா கெய்க்வாட் தற்போது மாநில கல்வி அமைச்சராக பணியாற்றி வருகிறார். கெய்க்வாட் மும்பையின் தாராவி தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற […]