சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 5 மருத்துவமனைகளில் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே, சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் இன்று நேரில் […]