இதன் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு என தகவல். அரசுப் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2013-ஆம் ஆண்டுக்கு முன் TRB மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு […]
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது. பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது. இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 1ம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி […]
கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சில அறிவுறுத்தலை வழங்கினர். அதில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிகளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த […]
இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு மேலாக பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை இருந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே […]
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கடந்த ஆண்டை விட இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என பள்ளிக்கல்வித்துறை தகவல். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், […]
வரும் 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-2021ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதன்படி, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் […]
நான் தலைமைச் செயலாளராக பணியாற்றும் வரை என் நூல்களை வாங்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொகுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள […]
மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மே 1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மறு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், […]
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வித்துறையில் உலகின் முதன்மையான இடத்திற்கு தமிழகம் வரும் என சீமான் பரப்புரையில் உறுதியளித்தார். கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்றும் அந்த தேர்தலிலும் 50% பெண் வேட்பளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் மிக குறைவு என குறிப்பிட்ட சீமான், பாஜகவின் மெயின் […]
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு தொடர்பாக கூடுதல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது ,அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ,”விடுமுறை நாளில், நீர் நிலைகளில் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் ஏற்கப்படும். “பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம்” ஏற்கப்படும் .”விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என்று பள்ளிக் […]
ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவிதித்துள்ளது. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து என்று அரசாணை […]