பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள். பள்ளி அளவில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை கல்விச் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.