சென்னை : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சாதி வன்முறைகளை தடுப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதிபதி […]
கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரிய வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு. கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அவரது மனுவில், தஞ்சையில் மாணவி மதமாற்றம் நடவடிக்கையால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருந்தது. இதைத்தவிர திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளில் மதமாற்றம் தொடர்பான புகார்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே, மதமாற்றத்தை பள்ளிகளில் […]